இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த தீர்மானம்..

Saturday, 14 December 2019 - 19:41

+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையேயான இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரொஷிமிற்சு மற்றும் அவருடன் வந்துள்ள உயர்மட்ட எட்டு பேரை கொண்ட குழுவினர் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக நேற்று வெளிவிவகாரத்துறை அமைச்சரும் அவரது குழுவினரும் ஜனாதிபதியை சந்தித்து இரு நாடுகளும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில் நுட்பம், பெருந்தெருக்கள், விவசாயம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர அதி உயர் தொழில் நுட்பத்தை கொண்ட ஜப்பானிய நிறுவனங்கள் இலங்கையில் தமது சேவையினை விரிவு படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.