வருவாய் இன்றி பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ள உணவகங்கள்

Sunday, 31 May 2020 - 19:35

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்த போதிலும், வருவாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 80 சத வீத வீழ்ச்சி இந்த வருடத்தில் ஏற்படும் என வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர், குறிப்பிட்ட சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
வாநூர்தி சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு பயணிகள் எவரும் விருந்தகங்களுக்கு புதிதாக வரவில்லை என நகர விருந்தக சங்கங்களின் தலைவர் எம். சாந்திகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எப்படியிருப்பினும், விருந்தகங்கள் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளதன் காரணமாக பணபுழக்க நடவடிக்கைகள் சுமார் 20 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







Exclusive Clips