ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

Saturday, 01 August 2020 - 20:14

%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை மாதத்தில் சற்று அதிகரித்து 4.8 சதவீதமாக காணப்பட்டுள்ளது.

இது ஜூன் மாதத்தில் 4.7 சதவீதமாக இருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீடும் ஜூலை மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 135.4 ஆக உயர்ந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

உணவு விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 2.6 சதவீதம் அதிகரித்து 1.1 சதவீதம் உயர்ந்து 148 ஆக பதிவாகியுள்ளது.

உணவு அல்லாத பொருட்களின் விலை கடந்த மாதம் 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.