தங்கத்தின் விலையில் மாற்றம்..!

Monday, 23 November 2020 - 11:07

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1873.31 அமெரிக்க டொலர்களாக ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1860.37 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இதற்கமைய கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

எனினும் கடந்த நவெம்பர் மாதம் உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1960.93 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை அண்ணளவாக 106,000 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை அண்ணளவாக 97,100 ரூபாவாக காணப்படுகின்றது.

கொவிட் 19 காரணமாக தங்கப்புரள்வு அதிகம் இடம்பெறும் பகுதிகள் மூடப்பட்டுள்ளமையினால் அண்ணளவான விலைகளே குறிப்பிடப்பட்டுள்ளன.