டயலொக் டெலிவிஷன் Missed call இன் ஊடாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்குகின்றது!

Monday, 25 January 2021 - 10:40

%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+Missed+call+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%21
இலங்கையில்உள்ள Pay-TV தொலைக்காட்சி சேவைகளின் வரலாற்றில் முதன் முறையாக, இலங்கையின் முன்னணி Pay-TV வலையமைப்பான டயலொக் டெலிவிஷன் ஒரு தனித்துவமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இதுவாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு மொபைல் போன் வலையமைப்பிலும் இருந்து தங்களுக்கு விருப்பமான எந்தவொரு தனி அலைவரிசையினையும் அல்லது அலைவரிசை பக்கேஜினையும் இலகுவாக missed call  மூலம் செயல்படுத்த உதவுகிறது.

இந்த புதிய சேவையுடன் வாடிக்கையாளர்கள் தங்களது டயலொக் டிவி கணக்கு பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் இருந்து ஒருமிஸ்கோலினை ஏற்படுத்துவதன் மூலம் தங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை அல்லது அலைவரிசை பக்கேஜினை எளிதாக செயல்படுத்த முடியும். டயலொக் மொபைல் இலக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட டயலொக் டிவி வாடிக்கையாளர்கள் 0760079XXXக்கு மிஸ்கோல் கொடுத்து தங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை செயற்படுத்திக் கொள்ளலாம். இந்தசேவையைப் பெறுவதற்கு, நீங்கள் செயற்படுத்த விரும்பும் அலைவரிசையின் கடைசி 3 இலக்கங்களை ‘xxx’ க்கு மேலே குறிப்பிட வேண்டும் மற்றும் 100 க்கும் குறைவான எண்களில் ஆரம்பமாகும் அலைவரிசைகளை செயற்படுத்தும்போது அலைவரிசை இலக்கத்திற்கு முன் பூஜ்ஜியத்தை பதிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு டயலொக் டிவி வாடிக்கையாளர் தங்கள் அலைவரிசை பட்டியலில் Ten Cricket (அலைவரிசை இலக்கம் 69) அலைவரிசையினை செயல்படுத்த விரும்பினால் 0760079069 க்கு மிஸ்கோலினை கொடுத்து இந்த அலைவரிசையினை செயற்படுத்திக் கொள்ளக்கூடியதுடன், அலைவரிசை பக்கேஜ்களை செயற்படுத்த இதே முறையினையே பின்பற்ற வேண்டும்.செயல்படுத்தப்பட்ட அலைவரிசை பட்டியல்களுக்கான மாதாந்த கட்டணம் வாடிக்கையாளரின் கட்டணத்துடன் இணைக்கப்படும்.

டயலொக் டெலிவிஷனின் வியாபார பிரிவு தலைவர் சிரந்த டீ சோய்சா கருத்து தெரிவிக்கையில் 'வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பப்படி ஒரு அலைவரிசையினை அல்லது அலைவரிசை பக்கேஜினை இலகுவாக மிஸ்கோலின் மூலம் செயற்படுத்த சமீபத்திய எளிதான முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் முதன் முறையாக, வாடிக்கையாளருக்கு அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும், பார்க்கும் அனுபவத்தின் காலஅளவையும் தீர்மானிக்க முழுசுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதுடன் இது ஒரு அலைவரிசையை மிகவும் எளிதாகவும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுத்தும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகிறது' எனதெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் 1777 க்கு அழைப்பினை ஏற்படுத்தவதன் மூலம் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். மிஸ்கோல் சேவையின் மூலம் உங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை செயற்படுத்திக் கொள்ளக்கூடியதுடன் நீங்கள் SMS ஊடாக 679க்கு அழைப்பினை ஏறபடுத்தி உங்களுக்கு பிடித்த அலைவரிசையினை எங்கள் குரல்சேவை (IVR) மூலமும் MyDialog App அல்லது dialog.lk ஊடாகவும் செயல்படுத்தலாம். மிஸ்கோல் சேவையின் மூலம் விரும்பிய அலைவரிசையினை செயல்படுத்த, வாடிக்கையாளரின் டயலொக் டெலிவிஷன் கணக்கு செயற்படும் நிலையில் இருக்க வேண்டும் என்பதும் போதுமானளவு கணக்கு மிகுதியும் காணப்படுதல் வேண்டும்.







Exclusive Clips