தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க 12,000 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

Saturday, 10 April 2021 - 13:29

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+12%2C000+%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 12,000 கறவை பசுக்கங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு தேவையான 50 சதவீத பால், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படுவதுடன் எஞ்சியவை இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது தேசிய உற்பத்தியின் கீழ் வருடாந்தம் 420 மில்லியன் லீட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதனை 2025 ஆம் ஆண்டு 750 மில்லியன் லீட்டராக அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கால்நடைவள, பண்ணை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு பாரியளவிலான பண்ணைகள் அமைக்க நிலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.







Exclusive Clips