குருணாகல் உட்பட 4 நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை

Thursday, 06 May 2021 - 12:57

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+4+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
குருணாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலியத்த ஆகிய நகரங்களை, முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில், நேற்று இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இந்தத் திட்டத்தை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








Exclusive Clips