அரசாங்கத்திடம் இலங்கை ஏற்றுமதியாளர் சபை முன்வைத்துள்ள கோரிக்கை

Sunday, 25 July 2021 - 13:52

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஏற்றுமதியாளர் சபை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியார்கள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்திலேயே, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையினை பேண முடியும் என ஏற்றுமதியாளர் சபையின் தலைவர் ரசல் ஜூரியான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏற்றுமதியாளர் சபையின் 51 ஆவது வருடாந்தர கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

அதேவேளை, பெறுமதி சேர் வரி செலுத்தும் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான மூல பொருட்களை இறக்குமதி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு இறக்குமதி நடவடிக்கைகளில் உள்ள கட்டுப்பாடுகளில் சலுகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது







Exclusive Clips