அடுத்த மாத இறுதியில் வெளிநாட்டு நாணய கையிருப்பினை மீள கட்டியெழுப்ப முடியும் - இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை

Friday, 30 July 2021 - 22:41

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
முதிர்ச்சியடைந்த சர்வதேச இறையாண்மை முறியின் முழு கொடுப்பனவு பெறப்படும் நிலையில், அடுத்த மாத இறுதியில் வெளிநாட்டு நாணய கையிருப்பினை மீள கட்டியெழுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இந்திய அரசாங்கம் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கம் என்பனவற்றின் ஒத்துழைப்பினை கோருவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் மேம்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு அமைய இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான ஏதுநிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் விசேட திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 750 முதல் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல 'சார்க்' ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Exclusive Clips