பங்கு சந்தை நடவடிக்கைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு செயற்திட்டம்!

Saturday, 31 July 2021 - 11:04

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
பங்கு சந்தை நடவடிக்கைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்றிட்டம் ஒன்றினை கொழும்பு பங்கு சந்தை முன்னெடுத்துவருகின்றது.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒருமுறை, சிறிய மற்றும் நடுத்தர  முதலீட்டாளர்களுக்கு பயன் தரக்கூடிய  பல பரிந்துரைகள் பங்கு சந்தை அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் மூலம் கொழும்பு பங்கு சந்தையின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாண மக்கள் ஆர்வத்துடன் பல விடயங்களை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதேபோன்றே மக்கள் சந்திப்புக்கள் கடந்த இரண்டு மாத காலப்பகுதியினுள் மாத்தறை, நீர்கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips