சர்வதேச ரீதியாக சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது!

Sunday, 01 August 2021 - 14:09

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%21
சர்வதேச ரீதியாக வரலாற்றிலேயே இரண்டாவது ஆண்டாக சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியினில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச ரீதியாக 65 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதத்தில் சிறிய அளவான முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், வீரியம் கூடிய கொரோனா தொற்று பரவியதன் காரணமாக பயணிகளின் பயணம் முடக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியினில் சர்வதேச ரீதியாக சுற்றுலாத்தலங்களுக்கு 14 கோடியே 70 லட்சம் சுற்றுலா பயணிகள் விஜயம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு பரவுவதற்கு முன்னர் உலகளாவிய ரீதியாக பயணித்த சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை, தற்போது 46 கோடி குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் முன்னேற்றத்தினை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exclusive Clips