இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

Thursday, 14 October 2021 - 11:58

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
நாட்டிற்கான பன்னாட்டு முறி முதலீட்டுத் தொகையானது எதிர்வரும் மூன்று வருடங்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்திற்கு கட்டம் கட்டமாகக் குறைக்கப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட 'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத வழிகாட்டல்' இன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நாட்டிற்கான பன்னாட்டு முறி முதிர்ச்சிகளின் வர்த்தகப்படுத்தலில் கழிக்கப்பட்ட விலைகளை அவதானத்திற்கொண்டு, பல மீள்கொள்வனவு நடைமுறையொன்றினை நிறைவேற்றும் சாத்தியப்பாட்டினை கண்டறிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.Exclusive Clips