545 கிலோமீட்டர் நீளமான வீதிகளைச் செப்பணிடும் வேலைகள் ஆரம்பம்

Thursday, 14 October 2021 - 18:48

545+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
திருகோணமலை மாவட்டத்தில் 545 கிலோமீட்டர் நீளமான வீதிகளைச் செப்பணிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெருந்தெருக்கள் திட்டப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை' பிரகடனத்திற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாவட்டத்தில் தற்போது 722 வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 755 மலசல கூடங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 43 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பெருந்தெருக்கள் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.Exclusive Clips