லங்கா கிளியருடனான பங்குடமை ஊடாக டிஜிட்டல் கையொப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கொமர்ஷல் வங்கி

Thursday, 21 October 2021 - 12:39

%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
லங்கா கிளியர் நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் லங்கா சைன் முறையைப் பயன்படுத்தி இடப்படும் டிஜிட்டல் கையொப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாகக் கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையில் வர்த்தக ரீதியாக செயற்படுத்தப்படும் சான்றுபடுத்தப்பட்ட அங்கீகாரம் கொண்ட டிஜிட்டல் கையொப்ப முறை இதுவேயாகும். இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்துக்கு இசைவாக இது செயற்படுகின்றது.

இது சம்பந்தமாக லங்கா கிளியர் நிறுவனத்துடன் வங்கி அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது. டிஜிட்டல் கையொப்பங்களைத் தழுவிக் கொள்வதற்கான முதலாவது படியாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்களின் கையொப்பங்களுக்காக டிஜிட்டல் கையொப்ப முறையை ஏற்றுக் கொள்ளவுள்ள இலங்கையின் முதலாவது நிதிசார் நிறுவனமாகக் கொமர்ஷல் வங்கி அமைந்துள்ளது.

இந்த அபிவிருத்தியின் முதலாவது கட்டமாக வங்கி அதன் கூட்டாண்மை வாடிக்கையாளர்களை தமது இணையவழி வங்கி விண்ணப்பங்களை டிஜிட்டல் முறையில் கையொப்பமிட ஊக்குவிக்கும்.

விரைவில் தமது வங்கி சம்பந்தமான ஆவணங்களில் இடப்படும் டிஜிட்டல் முறையிலான கையொப்பங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்தச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் கையொப்ப முறைகளை ஏற்றுக் கொள்வது பற்றி கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ரெங்கநாதன் குறிப்பிடுகையில்,

'நிதித்துறை நிறுவனங்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பம் இணையற்ற வசதிகளையும் அனுகூலங்களையும் வழங்குகின்றபோது அதில் பாதுகாப்பு மற்றும் மோசடிகள் தொடர்பான ஆபத்துக்களும் இருக்கின்றன.

இந்த ஆபத்துக்களை நீக்குவதற்கு இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் முறையில் ஏற்பட்டுள்ள வேகமான அதிகரிப்புடன் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றகரமான பாதுகாப்புக் கட்டமைப்பும் அவசியமாகின்றது.

லங்கா சைன் முறைமையின் கீழான டிஜிட்டல் கையொப்ப பண்புகள் இந்த விடயத்தில் ஒரு முக்கியமான கட்டமாக அமைகின்றது' என்று கூறினார்.

'இதற்கு மேலதிகமாக டிஜிட்டல் கையொப்பங்களின் அமுலாக்கம் எமது கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கான வசதிகளில் ஒரு பாரிய முன்னேற்றமாகவும் அமையும்.

குறிப்பாக இன்றைய நோய்ப்பரவல் காலப்பகுதியில் இது மிகவும் முக்கியமானதாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

கொமர்ஷல் வங்கியுடனான இந்தப் பங்குடமை பற்றி கருத்து வெளியிட்ட லங்கா கிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சன்ன டி சில்வா 'தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ஆவண ஒப்பமிடல் தேவைகளுக்காக லங்கா சைன் டிஜிட்டல் கையொப்ப முறையை அறிமுகம் செய்யும் கொமர்ஷல் வங்கியின் முற்போக்குத் திட்டத்தை நாம் பாராட்டுகின்றோம்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ஒரு கால கட்டத்தில், வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களின் பங்களிப்போடு செயற்படுகின்ற ஒரு சூழலில் இந்த நடைமுறையானது காலத்துக்கு உகந்ததும் வாடிக்கையாளர்களுக்கு சிநேகமானது என்றும் நாம் நம்புகின்றோம்.

மேலும் இது மிகவும் அவசியமான நேர்மையையும் உறுதி செய்கின்றது.

டிஜிட்டல் முறையில் ஒப்பமிடப்பட்ட ஆவணங்கள்மீதான மறுப்பற்ற அங்கீகாரத்தையும் இது வழங்குகின்றது. வங்கியின் நலன்களையும் அதன் வாடிக்கையாளர் நலன்களையும் இணையவழி பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆபத்திலிருந்து பாதுகாப்பதில் இது மிகவும் அத்தியாவசியமானது' என்றார்.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கி, இலங்கையில் 268 கிளைகளையும் 931 தானியங்கி வங்கி இயந்திரங்களையும் (ஏ.டி.எம்) கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது.

வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள், 19 கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன. அதேபோல், மியான்மாரின் நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும், மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக் கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.









Exclusive Clips