இலங்கையில் அதிகளவு முதலீடு செய்வதற்காக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர் தன்னுடைய நியமனம் இலங்கையின் பொருளாதார மீட்பின் ஒரு மிகப் பெரும் பங்காக இருக்க வேண்டும் என தாம் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் உலக நாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்தோரை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாடுகளில் உள்ளவர்களின் முதலீடுகள் மிக முக்கியமானதாகும்.