தனிநபர் வரி செலுத்த இலத்திரனியல் முறைமைகள் கட்டாயம்!

Sunday, 19 March 2023 - 18:44

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு தனிநபர் வரி செலுத்த இலத்திரனியல் முறைமைகள் கட்டாயமாக்கப்பட உள்ளன.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் உள்நாட்டு வருமானச் சட்டத்தில் திருத்தம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தத்தின்படி, ஒரு நபர் கணினி அமைப்பு அல்லது கையடக்க மின்னணு சாதனத்தைப் பயன்படுத்தி மின்னணு முறையில் வரியை செலுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.

நடைமுறையில், நிறுவனங்கள் தங்கள் வரிக் கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Exclusive Clips