அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றது!

Saturday, 27 May 2023 - 15:30

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%21
நேற்றைய தினம் வரையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.8 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம், 295 ரூபா 62 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 308 ரூபா 54 சதமாகவும் காணப்பட்டது.

இதேநேரம், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 18.9 வீதத்தாலும்,

ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 17 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளது.

இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.7 வீதத்தாலும்,

ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 26.4 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.







Exclusive Clips