ரிதமும், ஆடம்பரமும் சேர்ந்த Thaala Bentota ஹோட்டல் தொடங்கி வைப்பு!

Monday, 29 May 2023 - 14:35

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+Thaala+Bentota+%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ரிதமும் ஆடம்பரமும் சேர்ந்த கலவையாக Thaala Bentota ஹோட்டல் தொடங்கி வைக்கப்பட்டது.

Avani Bentota என முன்னர் அழைக்கப்பட்ட Thaala Bentota இலங்கையின் விருந்தோம்பலில்
உன்னதத்தின் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அதன் புதிய வர்த்தகநாமத்தை பெருமையுடன் வெளிப்படுத்துகிறது.

மனதைவிட்டு நீங்காத அனுபவத்தை உருவாக்குகின்ற நேசமிக்க பயண அடைவிடமொன்று ரி​தமும், இயற்கையும் ஆடம்பரம் ஒன்றிணைகின்ற சொர்காபுரியாக மாறுதலடைவதை இச்சிறப்புவாய்ந்த நிகழ்வு கொண்டாடுகிறது.

அற்புதமான இம்மாற்றமானது உலகத்தரம் வாய்ந்த சேவை மற்றும் அன்பான விருந்தோம்பலை பேணிக்காக்கும் அதேவேளையில் புதியதோர் வாழ்க்கை முறையைக் கொண்டுவருகின்றது.

Browns Hotels and Resorts இன் பெருமைமிக்க உறுப்பு நிறுவனமாக Thaala Bentota புகழ்பெற்ற விருந்தோம்பல் வர்த்தகநாமத்தை வரைவிலக்கணம் செய்கின்ற சிறப்பான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

பதிய வர்த்தகநாமம், மனதை விட்டு நீங்காத நினைவுகளை வழங்குவதற்கும் ரிதமும் ஆடம்பரமும் ஐக்கியமாக இணைந்த கலவையை உருவாக்குவதற்கும் உறுதியளிக்கின்ற அமைவிடத்தின் ஒரு அற்புதமான புதிய அத்தியாயமாக பிரதிபலிக்கிறது.

அதன் விதிவிலக்கான பண்புகளுக்குப் பெயர்பெற்ற Browns Hotels and Resorts அதே இணையற்ற வசதியையும், சௌகரியத்தையும் தற்போது Thaala Bentota உணவகத்தில் வழங்க காத்திருக்கின்றது.

ஜெஃப்ரி பாவா மூலம் ஈர்க்கப்பட்ட எக்காலத்திற்கும் பொருந்தும் கட்டடக்கலை வடிவமைப்பின் மூலம் உயிர்ப்பிக்கப்பட்ட ரிதம் என்ற உலகளாவிய எண்ணக்கருவை Thaala Bentota உள்ளடக்குகின்றது.

தாள என்ற​ ஹோட்டலின் புதிய பெயர் உள்ளூர் மொழியில் ரிதம் என்று பொருள்படும், இயற்கையையும், மனிதநேயத்தையும் ஒத்திசைக்கும் அதன் தனித்துவமான தொலைநோக்கினை இது பிரதிபலிக்கின்றது.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு, ஹோட்டல் முழுவதும் சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டு, சோர்வடைந்த பயணிகளுக்கு ஒரு சரணாலயத்தை உருவாக்குகிறது.

பெந்தோட்டையின் அழகிய உணவகம் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பரிபல்யமிக்க மணல், வரவேற்கும் புன்னகை மற்றும் நிகரற்ற சேவை ஆகியவற்றில் மாற்றமின்றி
விருந்தினர்கள் வீட்டில் இருப்பதைப் போன்று உணர்வதை உறுதிப்படுத்துகின்றது.

நிகழ்வில் உரையாற்றிய LOLC Holdings PLC யின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கபில ஜயவர்தன, “இம்மாறுதலானது இலங்கையில் விருந்தினர் அனுபவத்தை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஆடம்பர விருந்தோம்பலை மீள்வரைவிலக்கணம் செய்வதற்குமான எமது அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

ரிதம் மற்றும் இயற்கை ஆகிய இரண்டையும் ஒத்திசையச்செய்யும் எமது தொலைநோக்கினை Thaala Bentota உள்ளடக்கின்றது.

இது வெறுமனே பெயர் மாற்றம் அல்ல, எங்கள் விருந்தினர்களுடன் எதிரொலிக்கும் தனித்துவமான மற்றும் ஆர்வமூட்டும் அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது.

பொழுதுபோக்கு துறையில் நம்பகமான பெயரான Browns Hotels and Resorts குழுமத்தின் கீழ், உலகளாவிய விருந்தோம்பல் துறையில் Thaala Bentota உணவகத்தை முதன்மையாகப் பயணம் செய்யும் இடமாக இடம்பெறச்செய்வதே எமது நோக்கம்.

Browns Hotels &amp Resorts குழுமப் பொது முகாமையாளர் திரு. எக்சத் விஜேரத்ன குறிப்பிடுகையில், சொர்க்காபுரியான இத்தீவில் விருந்தினர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் இலங்கையின் இயற்கை அழகின் விளிம்பில் Thaala Bentota உணவகம் பெருமையுடன் நிற்கிறது.

ஒவ்வொரு விருந்தினரும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நேசத்துக்குரிய நினைவுகளுடன் புறப்படுவதை
உறுதிசெய்கின்ற சிறந்த சேவையை வழங்குவதற்கு Thaala Bentota உணவகத்தில் உள்ள எமது
அர்ப்பணிப்புமிக்க ஊழியர்கள் தயாராக உள்ளனர்.

நாம் தங்குவதற்கான ஒரு இடத்தை விடவும் அதிகமாக வழங்குகிறோம்.

நமது துடிப்பான கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் மற்றும் நமது நாட்டின் உள்ளமைப்பை வெளிப்படுத்தும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்.

பரிச்சயமான உணர்வை அனுபவிக்கின்ற அதேவேளை எமது உணவகம் வழங்கும் சிறப்புகளை அனுபவித்திட இப்பிரியமான ரிசோர்ட்டின் மறுபிறப்பைக் கொண்டாட மேம்படுத்தப்பட்ட தாள அதிர்வுகளுடன் எமது விருந்தாளிகளை எங்களுடன் சேர்த்து வரவேற்கிறோம்.

Thaala Bentota​ ஹோட்டலுக்கு உலகையே வரவேற்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

நாட்டிலுள்ள மிகவும் இலாபகரமான பல்தேசியக் பல்கூட்டுநிறுவனமான LOLC குழுமத்தின்
பொழுதுபோக்கு பிரிவாகச் செயற்படுகின்ற Browns Hotels and Resorts 2009ஆம் ஆண்டு முதல்
இலங்கை பொழுதுபோக்குத் துறையில் முதலீடுசெய்து வருகிறது.

மாலைதீவுகள் மற்றும் மொரிஷியஸுக்கு அதன் விரிவாக்கத்துடன், LOLC குழுமம் இச்சந்தைகள் ஒவ்வொன்றிலும் பாரிய
பொழுதுபோக்கிற்கான உரிமையாளர்களின் ஒன்றாக விளங்குவதற்கு தயாராகின்றது.

இலங்கை முழுவதும் உள்ள விதிவிலக்கான உணவகங்களின் சொத்துப்பட்டியலுடன் Browns Hotels and
Resorts இன் கீழ் உள்ள ரிசோர்ட் நிறுவனங்கள் விருந்தினர்களின் சௌகரியத்தையும் வசதியையும்
உறுதிசெய்வதற்கு அர்ப்பணித்துள்ளன.

No description available.
No description available.No description available.No description available.No description available.No description available.No description available.Exclusive Clips