இளம் நடிகை தற்கொலை?

Wednesday, 15 April 2015 - 16:11

%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%3F

பெங்காலி நடிகை திஷா கங்குலி  கடந்த 9ஆம் திகதி தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமனவர் திஷா . அவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.23 வயதாகும் திஷா தனது வீட்டில்  படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது படுக்கை அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அவரது நண்பர் கதவை உடைத்து திறந்து திஷாவின் உடலை கீழே இறக்கி உள்ளார்.

தற்கொலை குறித்து எந்த குறிப்பும் அவர் எழுதி வைக்கவில்லை. ஆனால் வீட்டில் இருந்து அவரது நாட்குறிப்பையும், கையடக்கத்தொலைபேசியையும் பொலிஸார் விசாரணைக்காக கைப்பற்றி உள்ளனர்.

விசாரணைக்கு பிறகே திஷாவின் மரணம் குறித்து கருத்து வெளியிட முடியுமென பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.

திஷாவுக்கு,  நடிகர் விவான் கோஸ் என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் . அவர்கள் தங்களது 5 வருட நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு எடுததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது காதலர் விவான் கூறும் போது நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்ததாக கூறி உள்ளார்.

இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக தனது காதலன் மற்றும் தாயாருடன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியையும் நேரடியாக பார்வையிட்டுள்ளார் திஷா.

அதன் பின்னர் வீட்டுக்கு வந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.