பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை

Friday, 11 November 2016 - 18:43

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து  மீட்கப்பட்டுள்ளது.

மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவற்துறைக்கு தகவல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவற்துறையினர் விரைந்து சென்று சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக நடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மட்டும் பல தொலைக்காட்சி நடிகர்கள் தற்கொலை செய்துவருவது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Exclusive Clips