பாலியல் தொழிலாளியாக மாறிய மேலும் ஒரு பிரபல நடிகை!!!

Tuesday, 07 February 2017 - 18:00

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21%21%21

நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது, பாலிவுட்டையும் கடந்து ஹாலிவுட் சென்றுவிட்டார், மேலும், நடிகர் டுவைன் ஜான்சன் உடன் இணைந்து ‛பேவாட்ச்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து பாலிவுட்டில் ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்க உள்ளார்.

தற்போது பத்மாவதி படத்தை எடுத்து வரும் பன்சாலி, இதைத்தொடர்ந்து ஒரு நாவலை மையமாக வைத்து பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இதில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் முக்கியமான ரோலில், அதுவும், பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக பிரியங்காவிடம் பேசிவிட்டதாகவும், அவரும் சம்மதம் சொல்லி கால்ஷீட் வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இதேவேளை, சினம் என்ற குறும்படத்தில் நடிகை தன்ஷிகா விலைமாதுவாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.