பிரபல தொலைக்காட்சி நடிகை உட்பட 4 பேர் அதிரடியாக கைது...

Friday, 10 February 2017 - 14:10

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
பாம்பை கையில் பிடித்து புகைப்படம் எடுத்து துன்புறுத்தியதாக டி.வி. நடிகை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை ஸ்ருதி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடிகை ஸ்ருதி, நடிகர் பியர்ல் புரி ஆகியோர் ஒரு நல்ல பாம்பை கையில் பிடித்தபடி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அப்போது இருவரும் பாம்பை துன்புறுத்தியதாக விலங்கு நல ஆர்வலர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில், நடிகை ஸ்ருதி தான் கையில் பிடித்து வைத்திருந்த பாம்பு உண்மையான பாம்பு அல்ல என்று கூறினார். இதையடுத்து அந்த புகைப்படத்தை வனத்துறை அதிகாரிகள் கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், நடிகை ஸ்ருதியும், பியர்ல் புரியும் உண்மையான நல்ல பாம்பை கையில் பிடித்து வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. டெலிவிஷன் தொடர் படப்பிடிப்பு ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட அந்த நல்ல பாம்பை அவர்கள் பிடித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நடிகை ஸ்ருதி, நடிகர் பியர்புரி மற்றும் அந்த டெலிவிஷன் தொடர் தயாரிப்பாளர்களான உட்கர்ஷ் பாலி, நிதின் சோலங்கி ஆகிய 4 பேர் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.