அஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா?

Thursday, 22 August 2019 - 11:28

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
தல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இத் திரைப்படம் மெகாஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில் தனது 60வது படத்திற்காக நேர்கொண்ட பார்வை படக்குழுவுடனேயே இணைகின்றார் அஜித்.

கார் பந்தய வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கள் இவ் வருட இறுதியில் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஜித் உண்மையில் ஒரு கார் பந்தைய வீரர் என்பதால் அவர் பல சாகசங்களை செய்யும் காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வீக்கபூர் இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் குறித்த திரைப்படம்  மூலமாக தமிழ் சினிமாவில் ஜான்வீக்கபூர் அறிமுகமாக உள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்த திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க தினமும் தீவிர உடற்பயிற்சியில் அஜித் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.