நடிகர் கமல்ஹாசனின் இணையத்தளத்தை வெளியிட்ட சூர்யா..!

Friday, 06 September 2019 - 10:01

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE..%21
உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலக வாழ்வின் 60 வருட நிறைவு விழாவை அவரது ரசிகர்கள் அனைவருமே கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இதை குறிக்கும் வகையிலான இணையத்தளமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் சூர்யா தொடங்கி வைத்திருக்கிறார்.

இது குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளதாவது, ‘நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களை அண்ணா என்று அழைப்பதா? சித்தப்பா என்று அழைப்பதா? என்ற குழப்பம் எனக்கு இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தை எல்லா ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன். இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த இணையதளத்தை தயாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கலைக் குடும்பத்திலும் ரசிகர்களின் குடும்பத்திலும் ஒருவனான எனக்கு அவரின் கலையுலக பயணத்தின் 60வது ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி’ என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sunday, 05 July 2020 - 9:45

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் நடிகரான விஜய் சென்னை-சாலிகிராமம்... Read More

ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடித்து சிரிக்கும் நயன்தாரா- வைரலாகும் காணொளி
Friday, 03 July 2020 - 6:24

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து... Read More

விஜய் தொடர்பில் நெப்போலியன் தெரிவித்த அதிரடி கருத்து..!
Thursday, 02 July 2020 - 15:27

தமிழ் சினிமாவின் மாவீரன் எனப்படும் நெப்போலியன் நடிகர் விஜய்யின்... Read More