சூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்

Friday, 06 September 2019 - 12:27

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தனது கணவரின் கடவுச்சீட்டு, பணம் திருடப்பட்டது தொடர்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபரும் நடிகருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். விசாகன் வெளிநாட்டிலும் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று வருவார்.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினியும் விசாகனும் ஒன்றாக லண்டன் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் சென்றனர். அங்கு விசாகன் தனது கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த பையை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி விமான நிலைய காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

பின்னர் அவர்கள் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கினர். இதுபற்றி இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரஜினிகாந்தின் மகள், மருமகன் என்பது தெரிந்ததும் உடனடியாக தற்காலிய கடவுச்சீட்டு வழங்கினர். இந்நிலையில் அவரது கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்க டாலரை திருடியது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான நிலையங்களில், பயணிகளுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறதா? கடந்த 1 ஆம் திகதி, ஹீத்ரு விமான நிலையத்தின் எமிரேட்ஸ் லவுஞ்சில், எங்கள் காருக்காக காத்திருந்தபோது, எங்கள் கைப்பை (hand luggage) திருடப்பட்டுவிட்டது. உடனடியாக புகார் கொடுத்தோம். காத்திருக்கும்படி காவல்துறையினர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அடுத்த நாள் எங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் , எமிரேட்ஸ் லவுஞ்ச்சில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.