“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..?

Saturday, 21 September 2019 - 11:13

%E2%80%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+4%E2%80%9D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%3F
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியானது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை அடுத்து கமல் தான் தொடர்ந்து அடுத்தடுத்து 3 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த சீசனும் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், இந்த 3வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் என்று சமூக வலைத்தளங்ககளில் வைரலாக பேசப்பட்டது வருகிறது.

அத்தோடு, அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

"பிக்பாஸ் 4 வது சீசனுக்கும் கமல் தான் தொகுப்பாளர் என்றும் வேறு யாரையும் நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனவும் விஜய் டிவி கூறியுள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது .

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் தொலைக்காட்சியால் வெளியிடப்படும்.