கமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..

Wednesday, 02 October 2019 - 12:24

%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..
சங்கரின் இயக்கத்தில கமல் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன திரைப்படம் இந்தியன்.

இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்ற நிலையில் திரைப்படம் குறித்த ருசிகர தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விவேக் நடிக்க உள்ளார் என்பதே அந்த ருசிகர தகவல் ஆகும்.


நடிகர் விவேக் நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க உள்ள முதல் படமாக இது அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன், பிரபல ஹாலிவூட் நடிகர் ஒருவர் இந்த திரைப்படத்தின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கமல்,சித்தார்த,காஜல் அகர்வால் என பல பிரபலங்கள் நடிக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அளவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.