விஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..!

Wednesday, 02 October 2019 - 18:12

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%9C%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+64%E2%80%9D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D..%21
பிகில் திரைப்படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் “தளபதி 64” இல் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வந்து ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ளது. வெளிநாடு சென்ற விஜய் சமீபத்தில் நாடு திரும்பி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து விவரங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டறிந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மேலும் சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒருவர் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்கவிருப்பதாகவும் விஜய் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய்யின் கேரக்டர் கல்லூரி பேராசிரியராக இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் அவரது கேரக்டர் ரசிகர்களால் விசில் பறக்க வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Exclusive Clips