விஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதியா...? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Thursday, 10 October 2019 - 16:33

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE...%3F+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் தளபதி விஜய் குறிப்பிடத்தக்கவர். 

அதேபோல் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் முன்னிலை வகிப்பவர் விஜய் சேதுபதி ஆவார்.

இவர்கள் இருவரும் தளபதி64 எனப்படும் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு,இவர்கள் இருவரும் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியிடப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படமும் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே இம்முறை களத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் படங்கள் போட்டியிட உள்ளமை ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.