விஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்

Tuesday, 15 October 2019 - 9:14

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E2%80%99%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்சி இணைந்துள்ளார்.

சாக்சி இந்த படத்தில் நடித்த நாயகி தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இன்று அவர் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படத்தை பதிவு செய்து இந்த தகவலையும் சாக்சி உறுதி செய்துள்ளார்.

சாக்சிக்கு தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்களில் சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டார். இதனையடுத்தே அவர் தமன்னாவுக்காக இந்த படத்தில் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார்.

Image result for சாக்ஷி