பாகுபலி 3 உருவாகுமா? லண்டனில் மீண்டும் இணைந்த படக்குழுவினர்..!

Saturday, 19 October 2019 - 15:49

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+3+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..%21
இந்திய சினிமாவை உலகமே திரும்பி பார்க்க செய்த பிரமாண்ட திரைப்படம் தான் பாகுபலி.

பாகுபலி திரைப்படத்தை இன்று பார்த்தாலும் முதல் நாள் பார்பதுபோன்ற ஒருவித உணர்வு நம்மில் அனைவருக்கும் ஏற்படும். அப்பேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இத்திரைப்படத்தை இயக்கிய ராஜமவுலி தற்போது மீண்டும் அதே குழுவுடன் இணைந்துள்ளார்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா, நடிகை அனுஷ்கா என அனைவரும் லண்டனில் ஒன்றிணைந்துள்ளனர்.

லண்டனில் உள்ள ராயல் பெர்த் ஹாலில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியொன்றிற்காக அவர்கள் லண்டல் சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பாகுபலி 3? என கேட்டு வருகின்றனர். ஆனால், இது பாகுபலி குழுவினரின் வெறும் சந்திப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.