அஜித்தின் அடுத்த பட நாயகி திருமணமான இளம் நடிகையா..?

Monday, 21 October 2019 - 10:25

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE..%3F+
அஜித் நடிக்க இருக்கும் 60வது திரைப்படமான “வலிமை” படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகியை தேர்வு செய்யும் பணியில் பேச்சு இயக்குனர் எச்.வினோத் குழுவினர் உள்ளனர்.

இதனை அடுத்து ஒருசில முன்னணி நடிகைகள் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நஸ்ரியா நசீம் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் நஸ்ரியா கூறியபோது, ‘வலிமை’ இந்த நாளில் ஒரு புதிய தகவல் கிடைக்கும்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் “வலிமை” படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Image result for nazriya naseem