பிகில் படம் குறித்து எழுந்த புதிய சர்ச்சை...அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Monday, 04 November 2019 - 17:07

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88...%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..+
தளபதி விஜய்,நயன்தாரா,யோகிபாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிகில்;.

கடந்த 25ஆம் திகதி வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியில் பெரியளவில் சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொக்ஸ் ஆபிஸில் முதன் நிலை பிடித்திருக்கும் இந்த பிகில் திரைப்படம் குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப் படத்தின் கதை தன்னுடையது என்று தெலுங்குபட இயக்குநர் ஒருவர் கச்சிபவுலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


குறித்த இயக்குநர் வழங்கிய வாய்மூல சாட்சியில் தான் மராட்டிய கால்பந்து பயிற்ச்சிவிப்பாளரான அகிலேஷ் பால் என்பவரின் கதையை படமாக எடுக்க இருந்ததாகவும், இது குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தி முடித்திருந்த நிலையில் நேர ஒழுங்கு காரணமாக படப்பிடிப்புகளை சில காலம் தள்ளி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து,கச்சிபவுலி காவல் துறையினர் அட்லிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

அதேபோல், உதவி இயக்குநர்களுல் ஒருவரான செல்வாவும் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று ஏற்கனவே அட்லிக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும்,பிகில் திரைப்படத்தின் வெற்றியை போலவே திரைப்படத்திற்கு எதிரான சில நிகழ்வுகளும் இடம்பெற்று வருவது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்துவதாக அமைந்துள்ளது.