கவினுக்காக மீண்டும் கண்ணீர் விட்ட லொஸ்லியா

Tuesday, 05 November 2019 - 8:51

%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
பிக் பாஸ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலாக எதிர்பார்த்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அதில் ரேஷ்மா, மதுமிதா, சரவணன், மீரா மிதுன் ஆகியோரை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று சிறப்பாக நடந்து முடிந்தது.

மேடையில் வந்த போட்டியாளர்கள் பிக் பாஸுக்கு முன், பின் உள்ள வாழ்க்கை எப்படி உள்ளது என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்கள். அப்போது கவின் ரசிகர்கள் கவின், கவின் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை கண்டு கோபிநாத்தே, 'இது என்ன நீ காசு கொடுத்துக் கத்தவைத்த கூட்டமா?' என்று கவினை கலாய்த்தார் . கவின் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு ஓவர் பில்ட் அப்பாக இருந்தது.

இந்த நிலையில் கவினுக்கு கிடைத்த ஆதரவை கண்டு லோஸ்லியா ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். அந்த வீடியோவை கவின்-லியா ரசிகர்கள் சமூக வலைதளங்கில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த கண்ணீரை நம்பி ஏமாறும் ஆட்கள் நாங்க இல்ல, நீங்க பிக் பாஸ் வீட்டிற்குள் நடித்தது போல் வெளியே வந்து நடிக்காதீங்க என்று ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பிறகு கவின், லோஸ்லியா சந்தித்துப் பேசி கொண்டது போல் தெரியவில்லை. அதே போல் நேற்றைய பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கூட இருவரும் பேசி கொள்ளவே இல்லை. அதனால் இவர்கள் உண்மையில் காதலிக்கவில்லை என்று பேசப்படுகிறது.