40 நாட்கள் விரதமிருக்கும் நயன்தாரா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tuesday, 19 November 2019 - 21:53

40+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
தளபதி விஜயுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், வரும் பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” என்ற படத்தில் அவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு கொரிய மொழி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி கதை திரைக்கதை எழுதி இயக்கவுள்ள “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் அம்மன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா 40 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு விரதம் இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே அவர் தெலுங்கில் உருவான ’ஸ்ரீராமஜெயம்’ என்ற படத்தில் சீதை கேரக்டரில் நடித்த போதும் அவர் விரதமிருந்து பூஜையில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நயன்தாரா ஒரு கேரக்டருக்காக இந்த அளவு மெனக்கிடுவதை அறிந்து கோலிவுட் திரையுலகில் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கேரக்டரை கேரக்டர் என்று நினைக்காமல் அந்த கேரக்டராகவே வாழும் நயன்தாராவின் அர்ப்பணிப்பு உழைப்பு தான் அவரை சூப்பர் ஸ்டாராக ஆகியுள்ளது என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.