சூப்பர் ஸ்டார் புள்ளிங்கோ கொண்டாடும் “சும்மா கிழி” - வீடியோ

Wednesday, 27 November 2019 - 19:53

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E2%80%9D+-+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்” திரைப்படம் தைப்பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள “தர்பார்” திரைப்படத்தின் பாடல்களை எதிர்வரும் 7ஆம் திகதி நேரு விளையாட்டு அரங்கில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக இன்று மாலை “தர்பார்” படத்தில் இடம்பெறும் ஒரு சிங்கிள் ட்ரெக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளது.

தலைவர் புள்ளிங்கோ கொண்டாடும் "சும்மா கிழி" - வீடியோ இதோ...