மாஸ்டர் திரைப்படத்தை காண காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கான ஓர் நற்செய்தி..!

Monday, 30 November 2020 - 9:28

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21+
நடிகர் விஜய், மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதம் திரையிடப்படவிருந்த இந்த திரைப்படம் கொரோனா அச்சம் காரணமாக திரைக்கு வரவில்லை.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படுவது தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த திரைப்படம் இணையத்தளத்தில் வெளியாகும் எனவும் பல தகவல்கள் கசிந்திருந்தன.

தற்பொழுது அனைவருக்கும் விளக்கமளிக்கும் வகையில்,  மாஸ்டர் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாஸ்டர் திரைப்படம் எதிர்வரும் பொங்கள் தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.