உடலமைப்பு குறித்த விமர்சனங்களுக்கு அபிராமி கொடுத்த பதிலடி!

Thursday, 08 April 2021 - 11:43

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%21
பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த நிலையில் அப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே பிக் பொஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள் அவரது உடலமைப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், தனது உடலமைப்பு குறித்து கிண்டல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு அபிராமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

"நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்.

உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த உங்கள் அம்மாவும் ஒரு பெண் தான். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்."

"இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள்,." என்று அபிராமி கூறியுள்ளார்.

Exclusive Clips