17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்!

Tuesday, 04 May 2021 - 17:17

17+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில், பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips