மீண்டும் திருமணமா? - நடிகை வனிதா விளக்கம்

Thursday, 10 June 2021 - 15:05

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%3F+-+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3 ஆவது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் திருமணம் முடித்து சில தினங்களிலேயே, அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இதனிடையே, நடிகை வனிதா, கல்கத்தாவை சேர்ந்த விமானி ஒருவரை அண்மையில் இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்களித்து நடிகை வனிதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன்.

எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Exclusive Clips