பிக்பொஸ் சீசன் 5 எப்போது ஆரம்பம்?

Thursday, 10 June 2021 - 17:30

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+5+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%3F
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியாக பிக்பொஸ் திகழ்கிறது.

இதுவரை தமிழில் 4 சீசன்கள் இடம்பெற்றுள்ளதுடன் பிக்பொஸ் 5ஆவது சீசன் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பொஸ் 5ஆவது சீசன் இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக பிக்பொஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும்.

எனினும் கடந்த சீசன் (4ஆவது சீசன்)  கொவிட் பரவல் காரணமாக ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டது.

இந்நிலையிலேயே பிக்பொஸ் 5ஆவது சீசனையும் இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Exclusive Clips