சூர்யா 40 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது! (காணொளி)

Thursday, 22 July 2021 - 18:09

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+40+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%29
சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யா 40 திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயரிடப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டிசிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்த டி.இமான் மூன்றாவது முறையாகவும் இந்த திரைப்படத்தின் ஊடாக அவருடன் இணைகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்தியராஜ், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்று மாலை 6 மணிக்கு வெளியான இப்படத்தின் முதல் பார்வை காணொளி வெளியான 10 நிமிடங்களில் ஒரு இலட்சத்து 54 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது.

முதல்பார்வை காணொனி..
Exclusive Clips