'விக்ரம்' படத்தில் இணையும் மற்றுமொரு மலையாள நடிகர்!

Tuesday, 27 July 2021 - 11:10

%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21
மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ந்து சாதனை படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார்.

நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக அவர் நடிக்க உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

No description available.







Exclusive Clips