'விஜய் 66' படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நீக்கிய பிரபலம்!

Thursday, 29 July 2021 - 11:58

%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+66%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%21
கார்த்தி, நாகர்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66 ஆவது படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

விஜய்யின் பிறந்தநாளில் அப்படத்தின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் வம்சி நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்காக அவர் ஐதராபாத்தில் தனது பிறந்த நாள் நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

அதில் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சங்கீதா, சோனு சூட், தயாரிப்பாளர்களான தில் ராஜு, அல்லு அரவிந்த், மெஹர் ரமேஷ், அனில் ரவிப்புடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வம்சி பைடிபள்ளிக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ், “எனது அபிமானத்திற்கு உரிய மனிதர், இயக்குநர்களில் ஒருவரான வம்சிக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வருடம் சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் நண்பரே. விஜய் அண்ணாவுடனான உங்களுடைய அடுத்த படத்திற்கு வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார்.

எனினும் அந்தப் பதிவை அவர் சில நிமிடங்களிலேயே நீக்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், அந்தப் பதிவின் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


No description available.

Exclusive Clips