'நெற்றிக்கண்' ட்ரெய்லர் வெளியானது! (காணொளி)

Thursday, 29 July 2021 - 13:47

%27%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%27+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
மிலிந்த் ராவ் இயக்கியுள்ள நெற்றிக்கண் (Netrikann) படத்தில் லேடி சுப்பர்ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

கொரோனா பரவல் காரணமாக இந்த படம்  ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் அஜ்மல் அமீர், சரண், இந்துஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'அவள்' புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கையாள்கிறார்.

இந்நிலையில் அந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சித் ஸ்ரீராம் குரலில் வெளியான இதுவும் கடந்து போகும் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips