சிறுமியின் ரசிகராக மாறிய ஏ.ஆர். ரஹ்மான்!

Friday, 30 July 2021 - 18:20

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21
‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று உலகளாவிய ரீதியில் பல ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அண்மையில் வெளியான '99 சோங்ஸ்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். தற்போது 'மூப்பிலா தமிழ் தாயே' என்ற பாடலை உருவாகி வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  காணொளியொன்றை பகிர்ந்திருக்கிறார்.

அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை சிறுமியொருவர் இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடுகிறார்.

இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

காணொளியை பார்வையிட: காணொளி

Exclusive Clips