பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நித்யா மேனன்!

Sunday, 01 August 2021 - 10:21

%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%21
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.

இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டிய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமான அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண், நித்யா மேனன்

Exclusive Clips