ஒரே தினத்தில் வெளியாகும் அஜித் - ரஜினி திரைப்படங்கள்?

Wednesday, 08 September 2021 - 16:41

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+-+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3F
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’அண்ணாத்த’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதே தினத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிக் கபூர் தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படாத நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தங்களில் #ValimaiDiwali என்ற பெயரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





Exclusive Clips