பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த நடிகை ரகுல் பிரீத் சிங்

Monday, 11 October 2021 - 14:04

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைத்தளத்தினூடாகத் தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தமிழில் அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' என்ற திரைப்படத்தின் மூலம் ரகுல் பிரீத் சிங் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின், கார்த்தியின் 'தேவ்', 'தீரன் அதிகாரம் ஒன்று', சூர்யாவின் 'என்ஜிகே' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'அயலான்' படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர பொலிவூட் மற்றும் டொலிவூட் திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  அவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரைக் காதலிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: 'இந்த வருடம் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ணமயமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி' எனக் குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Rakul Preet Singh confirms dating Jackky Bhagnani on her birthday |  NewsBytes







Exclusive Clips