தனது மகளை அறிமுகப்படுத்திய நடிகை ஷ்ரேயா!

Monday, 11 October 2021 - 23:00

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%21
நடிகை ஷ்ரேயா சரண், அவரது சமூக வலைத்தளத்தில் 2020 ஆம் ஆண்டு தனக்கு பெண் குழந்தையொன்று பிறந்ததாக அறிவித்துள்ளார்.  அத்துடன், இந்த விடயத்தை அவர் காணொளி பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து ஷ்ரேயாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நடிகை ஷ்ரேயா 'மழை' திரைப்படத்தினூடாகத் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் 'சிவாஜி', தளபதி விஜயுடன் 'அழகிய தமிழ் மகன்', தனுஷுடன் 'குட்டி', விக்ரமுடன் 'கந்தசாமி' என்று பல படங்களில் அவர் நடித்துள்ளார். 

முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஷ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரைக் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஷ்ரேயாவின் நடிப்பில் நரகாசூரன், சண்டைக்காரி உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன. மேலும் அவர் ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Shriya Saran, Andrei Koscheev blessed with a baby girl | Celebrities News –  India TV


Exclusive Clips